உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தட்கல் முன்பதிவுக்கு கூடுதல் இருக்கைகள் தேவை

தட்கல் முன்பதிவுக்கு கூடுதல் இருக்கைகள் தேவை

மதுரை: மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 'தட்கல்' முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். தட்கல் முன்பதிவு பாண்டியன் ரயிலில் குளிர்சாதன வசதியில் 66 டிக்கெட்களுக்கு காலை 10:00 மணிக்கும், சாதாரண இருக்கைகளுக்கான 88 டிக்கெட்களுக்குமுன்பதிவு காலை 11:00 மணிக்கும் துவங்குகிறது. முன்பதிவு துவங்கிய 5 நிமிடத்தில் நிறைவு பெற்று விடுகிறது. சிறப்பு நாட்களை தவிர மற்ற நேரங்களில் தட்கல் பதிவில் காத்திருப்போர் எண்ணிக்கை 20 என இருந்தாலும் பயணசீட்டு உறுதியாகி விடுகிறது. விழாக்காலங்களில் காத்திருப்போர் 10 ஆக இருந்தாலும் இடம் கிடைப்பதில்லை.தட்கல் பதிவு செய்வதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.மதுரையிலிருந்து சென்னை செல்லும் தென்மாவட்ட பயணிகள் அவசர தேவைக்கு தட்கல் முன்பதிவில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே பாண்டியன் ரயிலில் தட்கல் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை