உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை நதியில் ஆடிப்பெருக்கு

வைகை நதியில் ஆடிப்பெருக்கு

மதுரை: மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் வைகை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமை வகித்தார். வி.எச்.பி., மாவட்ட தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பாஜ., மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் காயத்ரி பரிவார் ஹோமம், பாரம்பரிய விளையாட்டுகள், நாட்டியாஞ்சலி, வைகை தீபாராதனை நடத்தப்பட்டது.காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை 5 ஆறுகளின் புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நதி பாதுகாப்பின் அவசியம் குறித்த சொற்பொழிவு, மழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தல், வைகை நதி தீபாராதனை, நதியை பாதுகாக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது. இவ்விழாவில் சாதுக்கள், துறவிகளுடன் பொதுமக்கள் பங்கேற்றனர். செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ