உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் மண்டல பொதுகுழு கூட்டம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன உப தலைவர் சுவாமி நியமானந்த, கல்லுாரி செயலர் வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். சங்க செயற்குழு உறுப்பினர் வாலகுருநாதன் வரவேற்றார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், செயலாளர் தீனதயாளன் பேசினர். முன்னாள் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் புதிய இணையதளத்திற்கு துணைத் தலைவர் சுரேஷ் கண்ணன் ரூ.ஒரு லட்சம் வழங்கினார். மாணவர்கள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் அருள்மாறன், கார்த்திகேயன், எல்லைராஜா, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். சங்க துணைச் செயலாளர் கோபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை