உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர்கள் நியமனம்

வழக்கறிஞர்கள் நியமனம்

மதுரை : மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் செயல்படுகிறது. செயலாளராக கூடுதல் குற்றவியல் நீதிபதி ராஜாமகேஷ் உள்ளார். இந்த அமைப்புக்கு 2024 - 2027 வரை மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய நேர்முக தேர்வு நடந்தது. 180க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், உமா சங்கர், சிவானந்தன், பிரசன்னா, கவிதா, ஜூனியர் பிரிவில் பிரபு, ராம்குமார், மருதுபாண்டியன், யோகேஸ்வரி, பானுப்ரியா உட்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி