உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளைஞர்களுக்கு கலைப்பயிற்சி

இளைஞர்களுக்கு கலைப்பயிற்சி

மதுரை: மதுரை அரசு இசைக்கல்லுாரியில் ஜூலை 12 முதல் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி முகாம் நடக்கிறது. 17 வயது முதல் ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் இசை நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம், பறையாட்டம் கலைகளில் வாரந்தோறும் வெள்ளி, சனிக் கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.இதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஓராண்டு பயிற்சி முடிவில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தி கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.தேர்ச்சி பெற்றவர்கள், வருங்காலங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலையாசிரியர்களாக பணியாற்றலாம். விவரங்களுக்கு மேற்பார்வையாளர் தமிழரசியை 95667 18704 தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ