உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.4.81 கோடி வரியை செலுத்த சொல்லுங்க... அமைச்சரிடம் சிபாரிசுக்கு சென்ற தலைவர்

ரூ.4.81 கோடி வரியை செலுத்த சொல்லுங்க... அமைச்சரிடம் சிபாரிசுக்கு சென்ற தலைவர்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஜவுளி பூங்கா நிறுவனங்கள் 14 ஆண்டுகளாக செலுத்தாத வரியை செலுத்த சொல்ல வேண்டும் என ஆய்வுக்கு வந்த அமைச்சர் காந்தியிடம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது: இங்குள்ள 25 நிறுவனங்கள் 14 ஆண்டுகளாக பேரூராட்சி அனுமதியின்றி இயங்கி வருகிறது. தொழில், கட்டட உரிமம் தொடர்புடைய கட்டணங்கள் செலுத்தவில்லை. கட்டட உறுதி தன்மை, தீயணைப்புத்துறை தடையில்லா சான்று, மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று என எதுவும் சமர்ப்பிக்கவில்லை. நகர் ஊரமைப்பு துறை மூலம் கட்டட வரைபட அனுமதியும் பெறவில்லை. இதனால் சொத்து வரி மற்றும் இதர கட்டணங்கள் நிர்ணயிக்க இயலவில்லை.சமீபத்தில் ரூ.1.5 கோடி மட்டும் செலுத்தினர். ரூ.4.81 கோடி வரி பாக்கி உள்ளது. இதை செலுத்துவதன் மூலம் பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆய்வின்போது துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கமிஷனர்கள் வள்ளலார், விவேகானந்தன், எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் ஜெயகாந்தன், நிர்வாகிகள் வினோத், முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி