உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு மாரத்தான்

விழிப்புணர்வு மாரத்தான்

திருமங்கலம்: போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி திருமங்கலத்தில் நேற்று நடந்தது.கூத்தியார்குண்டு பஸ் ஸ்டாப்பில் இருந்து திருமங்கலம் தெற்கு தெரு காந்தி சிலை வரை 8 கி.மீ., துாரம் போட்டி நடந்தது. அ.ம.மு.க., தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை துவக்கி வைத்தார். மாநில நிர்வாகி ஜீவிதா நாச்சியார் முன்னிலை வகித்தார். 5 வயது முதல் 50 வயது வரை 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை