உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 'டாப்செட்கோ' ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மூலம் கடன், புதிய பொற்கால திட்டம், சிறுவணிக கடன் திட்டங்களின் கீழ் வியாபாரம், தொழில் துவங்கவும், செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் கடன் பெறலாம்.இக்கடன் தொகை பெற 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறத்தினருக்கு ரூ.98 ஆயிரம், நகர்ப்பகுதியினருக்கு ரூ.3 லட்சம் வரை இருக்க வேண்டும்.விரும்புவோர் விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், இருப்பிடம், ஆதார், கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கையுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ