உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் மஞ்சு விரட்டு

மேலுாரில் மஞ்சு விரட்டு

மேலுார்: சருகுவலையபட்டி ஊதக்கருப்பு, மட்டங்கிபட்டி முனியாண்டி சுவாமி கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. கிராமத்து சார்பில் காளைகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.வடக்குவலையபட்டி, கீழவளவு, தனியாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். காளைகளை அடக்கியதில் 25 பேருக்கும் மேல் காயமேற்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி