உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூலித்தேவன் பிறந்தநாள்

பூலித்தேவன் பிறந்தநாள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பூலி தேவன் 309வது பிறந்தநாள் விழா நடந்தது.மறத்தமிழர் சேனை மாநில பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சார்லஸ் ரங்கசாமி, கதிரேசன், செந்தில்குமார், சோணை, இருளாண்டி முன்னிலை வகித்தனர். பொருளாளர் கோட்டூர் சாமி வரவேற்றார். யூனியன் சேர்மன் மகாலட்சுமி பூலித்தேவன் படத்திற்கு மலர் துாவினார். மகளிர் சேனை மாநில நிர்வாகிகள் மஞ்சு, பஞ்சு, காமாட்சி, இனிப்பு வழங்கினர். தே.மு.தி.க., நகர செயலாளர் பாலாஜி பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை