| ADDED : மே 26, 2024 04:18 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய தலைவர் க.மு.நடராஜன் நினைவுநாளை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.காந்தி நினைவு சிந்தனை கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். பேராசிரியர் ராஜ்குமார் எழுதிய அந்த அழகிய குழப்பம், காந்திய சிந்தனை கல்லுாரி தொகுத்து வழங்கிய காந்திக்கு பின் உலகளவில் நடைபெற்ற வன்முறையற்ற போராட்டங்கள் புத்தகங்களை பத்மபூஷன் விருதுபெற்ற கிருஷ்ணம்மாள் வெளியிட்டார். மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சர்வோதய மண்டலின் துணைத் தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் முத்துராஜா பெற்றுக் கொண்டனர். காந்திய நிர்வாகி சோமசுந்தரத்திற்கு அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன், நடராஜன் விருதை வழங்கினார்.சர்வோதயா மண்டல செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். கல்வி அலுவலர் நடராஜன் தொகுத்து வழங்கினார். காந்தி நினைவு நிதி பொருளாளர் உருமத்தான், காந்திகிராமம் அறக்கட்டளை மருத்துவ இயக்குநர் சத்யா, சர்வோதய மண்டல தலைவர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டனர்.