உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழிற்சாலை நில வகைப்பாடு மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தொழிற்சாலை நில வகைப்பாடு மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை: புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் (2021 - 2041) படி தொழிற்சாலை உள்ள இடங்கள் புதிய திட்ட வரைவில் வேறு வகைப்பாட்டு நிலங்களாக மாற்றப்பட்டிருந்தால் மே 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.தற்போது தொழிற்சாலை செயல்படும் இடங்கள் புதிய திட்ட வரைவில் வகை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஒவ்வொரு தனிநபரும் madurailpa.comஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மனுவை உள்ளூர் திட்ட குழும துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி மே 15. பாதிக்கப்பட்ட தொழிற்சாலை நில உரிமையாளர்கள் உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றார். இது தொடர்பாக 96594 96593, 84891 59991ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை