தானியங்களால் விபத்து அபாயம்
பேரையூர்: பேரையூர் பகுதி ரோடுகளில் சோளம் உட்பட தானியங்கள் உலர்த்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது சோளம் அறுவடை செய்து வருகின்றனர். இது அறுவடைக்கப் பின்பு உலர்த்தப்பட வேண்டும். பேரையூர்- உசிலம்பட்டி, வத்ராப், டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம் ரோட்டை விவசாயிகள் சோளக் கதிர்களை உலர்த்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் களங்கள் கிடையாது. எனவே, ஆங்காங்கே ரோட்டில் கற்களை வைத்து அதனருகில் உலர்த்துகின்றனர். ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கையால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற செயல்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்.