உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் டெலிகாலிங், 'டிவி' சர்வீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. நிறுவன பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராம் துவக்கி வைத்தார். தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு கழக மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார். பயிற்சி அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியாளர்கள் கண்ணன், கீர்த்திராஜ், ஷீபா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை