உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

திருநகர் : திருப்பரங்குன்றம் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணித்திட்டம் சார்பில் திருநகரில் சமுதாய வளைகாப்பு நடந்தது. இதில் நுாறு கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்து பேசுகையில், 'கர்ப்ப காலங்களில் பெண்கள் 'டிவி'நாடகம், கைப்பேசி பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அக்கால கட்டங்களில் உங்களது செயல்பாடுகள்தான் பிறக்கும் குழந்தைகளின் குணங்களாக அமையும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக பெற்றோர் வளர்க்க வேண்டும்' என்றார். மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர் சுவேதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி