உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருப்பரங்குன்றம்: மதுரை அமெரிக்கன் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன், சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் உடற் கல்வி இயக்குனர் ரவீந்திரன், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி உடற் கல்வி இயக்குநர் மகேந்திரன் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரி உடற் கல்வி இயக்குநர் ரமேஷ் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர்கள் மதுரை காமராஜ் பல்கலை சந்திரசேகரன், ஜெய வீரபாண்டி, சிவகாசி பால்டிப்சிங், திண்டுக்கல் ராஜ சேகர் உட்பட பலர் பாராட்டனர்.விருதுநகர் இ.இ.இ., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜமீலா தொகுத்து வழங்கினார். செந்தில் குமார நாடார் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ