உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

மதுரை: திருமங்கலம் மேலக்கோட்டை பாரதி நகர் செருவலிங்க அய்யனார் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கடம்பவனம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பிரகாஷ், ஜெயபாண்டியன், முனியாண்டி, சரவணன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் இரணிக்குமார், பாண்டியன் முன்னிலை வகித்தனர். புளியம்பட்டி, மையிட்டான்பட்டி, வடக்கம்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர். ஆர்.கர்ணன் ஒருங்கிணைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயராஜ், செருவன், கணேசன், பொன்னுச்சாமி, கலைச்செல்வன், செல்வம், பாண்டியராஜன் விழா குழுவில் இடம்பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ