உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்துரு அறிக்கைக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சந்துரு அறிக்கைக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு

மதுரை: 'அரசு கள்ளர் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்' என்ற ஓய்வு நீதிபதி சந்துரு பரிந்துரைக்கு மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி கூட்டம் தலைவர் சூரியகலா தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் முத்துராமன், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், செயலாளர் லோநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் 15வது திட்டக்குழுவில் தேர்வு செய்த நுாற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு கவுன்சிலில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் ஓய்வு நீதிபதி சந்துரு அரசுக்கு அளித்த அறிக்கையின் கருத்து குறித்தும் விவாதம் நடந்தது. கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், ஹிந்து அறநிலையத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என்ற சந்துருவின் பரிந்துரையை நிராகரித்து, அப்பள்ளிகள் வழக்கம் போல செயல்பட வேண்டும் என ஆலோசனை நடத்தினர்.இதனை நிறைவேற்ற வலியுறுத்தி அ.இ.பா.பி., கவுன்சிலர் காசிமாயன் கொண்டு வந்த தீர்மானத்தை, அனைத்து கவுன்சிலர்களும் மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலாவிடம் மனுவாக அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ