உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

உசிலம்பட்டி: வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணிசெய்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க தேசிய செயல் தலைவர் நம்புராஜன், உசிலம்பட்டி நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி, வீரய்யா உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் கமிஷனர் ராஜன், 'மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சம்பள பாக்கியை இதுவரை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. தொட்டப்பநாயக்கனுார் மக்கள் விரைவில் சம்பள பாக்கிக்காக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். உங்கள் போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைவில் சம்பளம் வழங்க ஏற்பாடு செய்கிறோம்' என சமரசம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை