உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு

ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு

மதுரை: மதுரை அய்யர்பங்களா உச்சபரம்பு மேடு நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம், ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு இன்று முதல் செப்.4 வரை நடக்கிறது.முதல்நாளான இன்று இரவு 9:00 மணிக்கு நத்தோற்ஸவம், ஆக.,30 காலை 10:30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ஆக.,31 காலை 10:00 மணிக்கு கோவிந்த பட்டாபிேஷகம், செப்.1 மாலை குழந்தைகளின் கலைநிகழ்ச்சி, செப்.2ல் நிகுஞ்ஜோத்ஸவம், செப்.,3 மதியம் 1:30 மணிக்கு ராதாகிருஷ்ணன் பஜன் மண்டலியின் அஷ்டபதி பஜனை, செப்.4 காலை 8:00 மணிக்கு ராதா கல்யாணம், செப்.5 காலை 10:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவங்கள் நடக்க உள்ளன. தினமும் மாலை 5:45 மணி முதல் 7:45 வரை முரளிதர சுவாமிகளின் சீடர் சனத்குமார் பாகவதர் ஸ்ரீமத் பாகவத மகாத்மியம் சொற்பொழிவாற்றுகிறார். தினமும் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை ஸ்ரீமத் பாகவதம் தசமஸ்கந்த பாராயணமும், மாலை 4:30 முதல் 5:45 வரை மகா கீர்த்தனம், இரவு 7:45க்கு சுவாமி பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை