உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீடுவீடாக மருத்துவ பரிசோதனை

வீடுவீடாக மருத்துவ பரிசோதனை

திருப்பரங்குன்றம் : அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளில் வலையங்குளம் வட்டார அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்கின்றனர்.அப்பகுதிகளில் 38 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒரு துணை நிலையத்திற்கு ஒரு பெண் தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் தலைமையில் தினமும் ஒரு பகுதிக்கு சென்று, வீடுகளில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்கின்றனர். பாதிப்பு உள்ளவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை