உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 18 நாட்களில் டி.ஆர்.ஓ., மாற்றம்

18 நாட்களில் டி.ஆர்.ஓ., மாற்றம்

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் டி.ஆர்.ஓ., ராகவேந்திரன் பொறுப்பேற்ற 18 நாட்களில் இடமாற்றப்பட்டார்.டி.ஆர்.ஓ.,வாக இருந்த சக்திவேல் சென்னை போக்குவரத்துக் கழக பொதுமேலாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். அவரது இடத்தில் சென்னை மூலிகை நிறுவனமான 'டாம்ப்கால்' பொதுமேலாளராக பணியாற்றிய ராகவேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார். கரூரைச் சேர்ந்த இவர், மதுரை வர மனமின்றி, நீண்ட நாட்களாக பொறுப்பேற்காமல் இருந்தார். பின்னர் வருவாய்த்துறை செயலர் அளவிலான அதிகாரிகள் உடனே பொறுப்பேற்கும்படி கூறியதால் பிப்.,14ல் பொறுப்பேற்றார். அதன்பின் மக்கள் குறைதீர் கூட்டம், வழக்கமான பணிகளை கவனித்தார். இந்நிலையில் 18 நாட்களில் அவரது பணி மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு, அவரது இடத்தில் திருவாரூர் நெடுஞ்சாலை திட்டங்கள் நிலஎடுப்பு தனி டி.ஆர்.ஓ., அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை