மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு
1 hour(s) ago
டேக் வாண்டோவில் மாணவர்கள் சாதனை
1 hour(s) ago
துாத்துக்குடி - பெங்களூருக்கு சிறப்பு ரயில்
2 hour(s) ago
தேசிய கிரிக்கெட் அணியில் பள்ளி மாணவர்
2 hour(s) ago
மதுரை : மதுரையில் எல்.ஐ.சி., உழைக்கும் மகளிர் துணைக்குழுவின் 38 வது மகளிர் மாநாடு அமைப்பாளர் சித்ரா தலைமையில் நடந்தது.கீதா வரவேற்றார். தென்மண்டல இணை அமைப்பாளர் செண்பகம், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜென்னியம்மாள் பேசினர். பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசியதாவது:உலகில் முதலில் தோன்றிய உயிர் பெண் என மானுடவியல் கூறுகிறது. காலம் காலமாக சொல்லும் சொற்றொடர்கள், பழமொழிகள் பெண்களுக்கு எதிராகவே உள்ளன. பெண்களின் வெற்றிக்கு பெண்களே இன்று தடையாக உள்ளனர்.முன்பு சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் குறைத்தே மதிப்பிடப்பட்டனர்.ஆனால் என்று கல்வியில் ஆணுக்கு நிகராக பெண்கள் வந்தார்களோ அன்றுமுதல் சம்பளம், பதவி, சமஉரிமை, அதிகாரம் பெண்களுக்கு வந்து சேர்ந்தது. எனவே பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி மிக அவசியம் என்றார்.கல்விக் கொடையாளர் ஆயி என்ற பூரணம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற கமுதி மாணவி காவிய ஜனனி, கோட்ட அளவில் சாதனை படைத்த எல்.ஐ.சி., முகவர்கள் மாலதி, தெய்வா, சித்ரா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக போராடிவரும் அனுசுயாவுடன் துணை நிற்பதாக மகளிர் துணைக்குழு சார்பில் உறுதி கூறினர்.பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை அமைப்பாளர் வசுமதி நன்றி கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago