கவலையில் கத்தரி விவசாயிகள்
பேரையூர்: கத்தரிக்காய் விலை வீழ்ந்துள்ளதால் பேரையூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதி கிணற்று பாசனத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கத்தரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.40க்கு கொள்முதல் செய்த கத்தரிக்காய், தற்போது கொள்முதல் விலை மிகவும் குறைந்து விட்டது. இதனால் பறிப்பு கூலி கூட கிடைப்பதில்லை என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் செலவு செய்து கத்தரிக்காய் பயிரிட்டுள்ளோம். நாற்று நட்டு 45 நாட்கள் முதல் 5 மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.20க்கு கொள்முதல் செய்தனர். தற்போது கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்கின்றனர். கூலி கொடுப்பதற்குக்கூட வருவாய் கிடைக்காததால் அறுவடை செய்யாமல் உள்ளோம் என்றனர்.