உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழைய இறைச்சி தடுக்க வலியுறுத்தல்

பழைய இறைச்சி தடுக்க வலியுறுத்தல்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி மெயின்ரோடு, கேட்டுக்கடை பகுதிகளில் ஆடு, கோழி, மீன் இறைச்சி விற்பனை கடைகள் உள்ளன. வார நாள், விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரத்தினர் இறைச்சி வாங்கி செல்கின்றனர். இங்கு சில கடைகளில் ஆடு, கோழி இறைச்சியை அதிக நாட்கள் பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.இதுபோன்ற பழைய இறைச்சியை சமைத்து சாப்பிடுவோருக்கு பல்வேறு உடல் உபாதை ஏற்படுகிறது. இதைத் தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலங்காநல்லுார் மட்டுமின்றி வாடிப்பட்டி, சோழவந்தான், பாலமேடு இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்