உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு அகலமாக இருந்தும் பயனில்லையே; ஷேர் ஆட்டோக்களால் நெரிசல் ஏற்படுகிறதே

ரோடு அகலமாக இருந்தும் பயனில்லையே; ஷேர் ஆட்டோக்களால் நெரிசல் ஏற்படுகிறதே

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வழியாக செல்லும் ஒருவழிப் பாதையான பனகல் ரோட்டின் துவக்கம், பழைய மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனை வாசல் பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இருவழிப்பாதையாக இருந்த ரோடு அதிக நெரிசலால் ஓராண்டுக்கு முன் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு, கோரிப்பாளையத்தில் இருந்து வாகனங்கள் பனகல் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம், வைகையாற்று கரை ரோடு, கோமதிபுரம் செல்கின்றன. ஒருவழிப்பாதையாக்கப்பட்டாலும் போக்குவரத்து பிரச்னை தீரவில்லை. மருத்துவமனை எதிரில் மாநகராட்சி அலுவலகம், சுரங்கப்பாதை, போலீஸ் செக்போஸ்ட் என வரிசையாக உள்ளதால் அந்த இடம் மட்டும் சற்று குறுகலாக இருக்கும். இதையொட்டி வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் இவற்றைத் தாண்டி பின்னால் வரும் வாகனங்கள் செல்லமுடியவில்லை. அருகிலேயே போலீஸ் செக் போஸ்ட் இருந்தாலும், தொடர்ந்து ஹாரன் அடித்தாலும், ஷேர் ஆட்டோக்காரர்கள் கண்டு கொள்வதில்லை.தினமும் இந்த ரோடு வழியாக பயணிப்பவர்கள் ஷேர் ஆட்டோக்களின் தொல்லையால் பரிதவிக்கின்றனர். மருத்துவமனையில் இருந்து வருவோரை அங்கிருந்தே ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக போக்குவரத்தைப் பற்றி கவலைப்படாமல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். மிக முக்கியமான இந்த ரோட்டில் நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரை நியமித்தால் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் சிரமமின்றி செல்ல முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை