உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் கண்காட்சி

பள்ளியில் கண்காட்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிண்டர் கார்டன் பள்ளி குழந்தைகள் உருவாக்கிய மாதிரிகளின் கண்காட்சி, மகளிர் தின விழா நடந்தது.ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., மழலையர் பாடங்களில் உள்ள சமூக விழிப்புணர்வு, தேசிய கருத்துக்கள் அடங்கிய மாடல்களை உருவாக்கி கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். அவர்கள் உருவாக்கிய மாடல்களின் விவரங்களை பார்வையாளர்களுக்கு தங்களது மழலை சொற்களில் விவரித்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.பள்ளி முதல்வர் சசிரேகா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மேலாளர் ஆதிகேசவன் முன்னிலை வகித்தார். பெற்றோருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை