உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யானை தந்தத்தால் குத்தியதில் விவசாயி பலி

யானை தந்தத்தால் குத்தியதில் விவசாயி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஆலள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; விவசாயி. இவர், நேற்று காலை, 7:30 மணிக்கு ஆலஹள்ளி - மணியம்பாடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, ராஜேந்திரனை விரட்டி சென்று, வலது மார்பு, தோள்பட்டை ஆகிய இடங்களில் தந்தத்தால் குத்தியதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ண கிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மாலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.தேன்கனிக்கோட்டை போலீசார், வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ