| ADDED : ஜூலை 12, 2024 04:40 AM
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துபாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.தேனி, சிவகங்கை சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் இப்பகுதி கரும்புகளை பதிவு செய்திருந்தால் ரத்து செய்ய வேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய்கள் மராமத்து பார்க்காததால் விவசாயம் பாதித்துள்ளது. பருவமழை துவங்க உள்ளதால் தென்னை, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கச்சிராயன்பட்டியில் பயிர்கடன் வழங்காமல் காலம் கடத்துகின்றனர். திருவாதவூரில் நெட்டியேந்தல்குளம் வருவாய்துறை ஆவணத்தில் தரிசாக உள்ளதால் மாற்றம் செய்ய வேண்டும்.கேசம்பட்டி பெரிய அருவி, கொடுக்கம்பட்டி, வெள்ளலுார் கிராமங்களில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கீழையூர் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் வாங்கிய பணத்தை அதிகாரிகளிடம் இருந்து வசூலித்து மின் இணைப்பு வழங்க வேண்டும். சொக்கலிங்கபுரத்தில் உப்பாறு கால்வாய் அழிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையினர் கால்வாய்களை முன்கூட்டியே பராமரிக்காமல் தண்ணீர் திறப்பதற்கு முன் பெயரளவில் வேலை பார்த்தது போல் முறைகேடு செய்கின்றனர். கொட்டாம்பட்டி பகுதிக்கு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் அமைக்க வேண்டும் என்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பழனிச்சாமி, மணி, கிருஷ்ணன், அருண்குமார், துரைசாமி, துரைபாண்டி, சாகுல்ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.