உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகராட்சி குப்பை மையத்தில் தீ

நகராட்சி குப்பை மையத்தில் தீ

உசிலம்பட்டி: உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான நுண்ணுரம் செயலாக்க மையம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.24 வார்டுகளில் சேரும் குப்பையை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மைதானத்தில் தொடர்ந்து குப்பையை தரம் பிரித்து உரமாக்காமல் குவித்து வைப்பதால் குப்பையில் தீ பற்றி எரிவது தொடர் கதையாக உள்ளது.நேற்று மாலை மக்காத பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து வைத்திருந்த கட்டடத்திற்குள் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை