உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கில் ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் ஐந்து பேர் கைது

மதுரை : மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன் 64. நில புரோக்கராக செயல்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு வாசலில் சிலர் அவரை கொலை செய்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் அவர் கொலை தொடர்பாக தஞ்சை பாக்கியராஜ், சின்னாளப்பட்டி சபரிகாந்தன், திருச்சுழி மாரீஸ்வரன், மதுரை மேலமடை மணிகண்டன், தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ