உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது

மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது

சோழவந்தான்: சித்தாலங்குடி சரஸ்வதி 65, இவரிடம் அதே பகுதி மீனா 32, சுய உதவிக் குழு, வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகக்கூறி 6 மாதமாக சிறிதுசிறிதாக 14 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றினார். நேற்று திருப்பி கேட்டபோது மீனா, அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் சதீஷ் 36, சரஸ்வதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சோழவந்தான் போலீசார் மீனா, சதீஷை கைது செய்த அவர்களிடமிருந்து 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி