உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலையில் இருந்து விடுபட இலவச ஆலோசனை

புகையிலையில் இருந்து விடுபட இலவச ஆலோசனை

மதுரை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் எச்.சி.எல். பவுண்டேஷன்சார்பில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் புற்றுநோய் தடுப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெஸ்ட் பல் அறிவியல் கல்லுாரியுடன் இணைந்து இலவச பல் சிகிச்சை மற்றும் புகையிலை குறித்த சிறப்பு விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. மதுரையில் புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் பவுண்டேஷன் நிர்வாகி பிரபாகரன், மருத்துவமனை நிர்வாகி ஐசக் ராஜேஷ்சேகர், பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் மாலதி, டாக்டர்கள் பழனிவேல் பாண்டியன், பிரேம்குமார் கலந்து கொண்டனர். இலவச ஆலோசனைக்கு தினமும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை 86676 47802ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை