இலவச பயிற்சி
மேலுார்: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கயிலை அறக்கட்டளை வட்டெழுத்து குழு சார்பில் உறுப்பினர்கள் 6வது களப்பயணம் மேற்கொண்டனர். நிறுவனர் துரைசாமி, பயிற்சியாளர் வைகுந்த வாசகன் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் 150 பேருக்கு கீழவளவு, கருங்காலக்குடி, அரிட்டாபட்டி உள்ளிட்ட மலைகளில் தமிழின் தொன்மை, பிராமிய, வட்ட எழுத்துக்கள் மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.