உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையில்லா மதுரை: ஏக்கத்தில் மக்கள்

குப்பையில்லா மதுரை: ஏக்கத்தில் மக்கள்

மதுரை : மதுரை ஏற்குடி அச்சம்பத்து அருகே மாப்பிள்ளை விநாயகர் குடியிருப்பு நுழைவு வாயிலில் மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் இடம் உள்ளது. அங்கு குப்பை மலை போல் குவிந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடியிருப்பு பகுதி குப்பை சேகரிக்கப்பட்டு இங்குள்ள கிடங்கில் கொட்டப்படுகிறது. பாசனத்திற்காக வைகையில் தண்ணீர் திறக்கப்படும் போது கிருதுமால் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அச்சமயம் இக்கிடங்கில் இருந்து குப்பையை அக்கால்வாய்க்குள் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் தள்ளி விடுகின்றனர். இதனால் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.ஊராட்சி சார்பில் குப்பையை கால்வாயில் கொட்டக்கூடாது என அறிவிப்புப் பலகை வைத்தும் பலனில்லை. மழையில் குப்பை நனைந்து துர்நாற்றம் வீசுவதால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து அருகில் வசிப்போருக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே சேகரிக்கப்படும் குப்பையை குடியிருப்பு அல்லாத இடத்தில் சேர்த்து தரம் பிரிக்க வேண்டும் என்றனர்.மதுரையில் பல இடங்கள் குப்பை மலையாக உள்ளன. மாநகராட்சியும், ஊராட்சிகளும் குப்பை மேலாண்மையில் படுமோசமாக உள்ளன. எத்தனை திட்டங்கள் வந்தாலும் குப்பை மேலாண்மைக்கான திட்டத்தை முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை