உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு காரீப் பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு காரீப் பயிற்சி முகாம்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் வட்டார வேளாண்மை துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம்பட்டி, அ.கோவில்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர் காரீப் பருவ பயிற்சி முகாம் நடந்தது.உதவி இயக்குனர் மயில் துவக்கி வைத்தார். வேளாண் முன்னேற்ற குழு செயல்பாடு அமைப்பு, அதன் நோக்கம், மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது, பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் நுண்ணுயிர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் ராமன் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் மக்காச்சோளம் மற்றும் பயறு வகை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, விதை நேர்த்தி, திரவ உயிர் உரங்களின் பயன்கள் பூச்சி நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினார். உதவி அலுவலர்கள் ஈஸ்வரன், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி