மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
20 hour(s) ago
தினகரனுக்கு அய்யப்பன் பதில்
21 hour(s) ago
உயிர்ம உற்பத்தி திட்ட பயிற்சி
21 hour(s) ago
தனித்துவ அடையாள எண் ஆய்வு
21 hour(s) ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்குட்பட்ட நல்லுாரில் அட்மா திட்டத்தின் கீழ் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்து, தரிசு நிலத்தை பண்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வரவேண்டியதன் அவசியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். மத்திய அரசு திட்டங்கள், இயற்கை முறையில் சாகுபடி முறைகள் குறித்து வேளாண் திட்ட ஆலோசகர் விவேகானந்தன் பேசினார். ஆடுகள் வளர்ப்பு முறைகள், நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து கால்நடை டாக்டர் அருண்சங்கர் எடுத்துரைத்தார். மண் வள மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், வேளாண் துறையில் மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்து துணை வேளாண் அலுவலர் பாரதி பேசினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சேகர், அட்மா தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
20 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago