| ADDED : ஆக 10, 2024 05:31 AM
பேரையூர் : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் - கார் மோதியதில் பெண் குழந்தை உட்பட 2 பேர் பலியாயினர்.மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காடனேரியைச் சேர்ந்தவர் சென்றாயபெருமாள் 35. இவரது மனைவி பிரியங்கா. மகள் சிவானிகா 2. சென்றாயபெருமாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரியங்காவின் சொந்த ஊரான திருப்பத்துார் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றார். டிஸ்சார்ஜ் ஆகி நேற்றுமுன்தினம் இரவு காரில் மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் சவுந்தர்ராஜன் 50, வள்ளியம்மாள், சுரேஷ், சாந்தா ஆகியோருடன் காடனேரி நோக்கி புறப்பட்டனர். டிரைவர் அப்பீஸ் காரை ஓட்டினார்.நேற்று காலை டி.கல்லுப்பட்டி அருகே டி. புதுப்பட்டி பகுதியில் வந்தபோது காரும் அரசு டவுன் பஸ்சும் மோதியதில் சிவானிகா, சவுந்தர்ராஜன் இறந்தனர். 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.