உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குரு பூர்ணிமா நிகழ்ச்சி

குரு பூர்ணிமா நிகழ்ச்சி

மதுரை: காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் குருபூர்ணிமா சிறப்புரை, கலந்துரையாடல் நடந்தது.ஓய்வு பெற்ற நுாலக அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் தேவதாஸ் முக்காலத்தையும் அறிந்தவர் குரு எனும் தலைப்பில் பேசினார்.அவர் பேசியதாவது: இந்தியா குரு மரபுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குருக்கள் ஆன்மிக ஞானத்தை காலம் காலமாக மாணவர்களுக்கு கற்பிதம் செய்து வருகின்றனர். நம் வாழ்க்கையில் அர்த்தத்தை கொடுப்பவர் குரு. இருளையும் அறியாமையும் அகற்றி ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்பவர் குரு. ஆகவே மாணவர்கள் முக்காலத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற சிறந்த குருவை தேர்வு செய்து அவருடைய அறிவுரைகளை கேட்டு அதன்படி வாழ வேண்டும் என்றார்.குரு, குரு குலம், குருவின் வகைப்பாடு, வரலாற்றுப் பின்னணி குறித்து மாணவர்கள் செல்வ குமார், கிருத்திகா பேசினர். யோகா ஆசிரியை ஜானகி யோகாசனம், பிராணாயாமம் பயிற்சிகளை வழங்கினார். ஏற்பாடுகளை மியூசியம் செயலாளர் நந்தாராவ் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை