உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை நகரில் திருடு போன, வழிப்பறி செய்யப்பட்ட 359 அலைபேசிகளை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஒப்படைத்தார்.அவர் கூறியதாவது: திருவிழாக்கள், கடைகளில் திருடுபோன 326 அலைபேசிகள் சைபர் கிரைம் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வழிப்பறி செய்யப்பட்ட 33 அலைபேசிகள் கோர்ட் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்த மதிப்பு ரூ.37 லட்சம். கடந்த முறை 360 அலைபேசிகள் மீட்கப்பட்டன. திருடுபோன அலைபேசிகளை மீட்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருடியவர், வாங்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். துணைகமிஷனர்கள் குமார், மதுகுமாரி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை