மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
20 hour(s) ago
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 10 நாட்கள் ஆனி பிரம்மோற்ஸவம் நடத்த தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆனி மாதம் ஸ்ரீராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்ஸவம் ஆகம விதிப்படி 10 நாட்கள் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டுகளில் ஆனியில் 3 நாட்கள் மட்டுமே உற்ஸவம் நடந்தது. தற்போது ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஆகமம், சம்பிரதாயத்திற்கு எதிரானது. தேவஸ்தானம் 1952 ல் வெளியிட்ட 'ராமேஸ்வரமும் புண்ணிய சேதுவும்' புத்தகத்தில் பிரம்ம உற்ஸவம் 10 நாட்கள் நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மோற்ஸவத்தை 10 நாட்கள் நடத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனர் ஜூன் 18 ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago