உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹாங்காங் கல்விச்சுற்றுலா மதுரை மாணவர்கள் குஷி

ஹாங்காங் கல்விச்சுற்றுலா மதுரை மாணவர்கள் குஷி

மதுரை: மதுரையில் கலைத்திருவிழா, டேக்வாண்டோ போட்டிகளில் சாதனை படைத்த அரசு பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்கள் ஹாங்காங்கிற்கு கல்விச்சுற்றுலா சென்றனர்.கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற டி.ராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆகாஷ், மாநில வினாடி வினா போட்டியில் முதலிடம் வென்ற மதுரை வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி சாதனா, மாநில கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ராஜலட்சுமி, கவிதை போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கவுதம் ஆகியோர் ஹாங்காங் சென்றனர். சி.இ.ஓ., கார்த்திகா, உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர் வாழ்த்தி வழியனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை