உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனைவியை வெட்டிய கணவர் தற்கொலை

மனைவியை வெட்டிய கணவர் தற்கொலை

மதுரை:மதுரை செல்லுார், 50 அடி ரோட்டைச் சேர்ந்தவர் சம்சுதீன், 42. இவருக்கும் மனைவி சையதுஅலி பாத்திமா, 38, க்கும் ஏற்கனவே விவகாரத்து ஆகிவிட்டது.சம்சுதீன் இரண்டாவதாக பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதேநேரத்தில், பாத்திமாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியுள்ளது. சம்சுதீன் அவருக்கு மூன்றாவது கணவர். பாத்திமாவுக்கு ஒரு மகள் உள்ளார். நான்கு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த சம்சுதீன் அடிக்கடி பாத்திமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். கடந்த 7ம் தேதி இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த சம்சுதீன், அரிவாளால் பாத்திமாவை வெட்டினார். தலை, மற்றும் கையில் காயம்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் பாத்திமா சேர்க்கப்பட்டார். சம்சுதீனை கைது செய்ய போலீசார் வந்தனர். உடல் எரிந்த நிலையில் சம்சுதீன் கிடந்தார். போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை