மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
20 hour(s) ago
மேலுார் : 'நான் வங்கி அதிகாரி பேசுறேங்க. உங்க ஏ.டி.எம்., கார்டு நம்பர் சொல்லுங்க' என கொஞ்சும் தமிழில் பேசி பணத்தை திருடினர். மக்கள் விழித்துக்கொண்டனர். அடுத்தது எஸ்.எம்.எஸ்., உடன் 'லிங்க்' ஒன்றை வங்கியில் இருந்து அனுப்புவது போல் அனுப்பி பணத்தை சுருட்டினர். அதிலும் மக்கள் விழித்துக்கொண்டனர். இப்படி பல 'அவதாரங்கள்' எடுத்த போலி நபர்கள், தற்போது 'சுங்கத்துறை ஆய்வாளர்' என பதவியை கையில் எடுத்து மோசடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் சில நாட்களாக பொதுமக்களுக்கு சுங்கத்துறை (கஸ்டம்ஸ்) அலுவலகத்தில் இருந்து பேசுவது போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அலைபேசி எண் மற்றும் பெயரை சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டு 'உங்கள் பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் ஏ.டி.எம்., கார்டு, போலி பாஸ்போர்ட் மற்றும் போதை பொருள் இருக்கிறது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் பணம் தர வேண்டும்' என மிரட்டுவதாக மக்கள் கூறுகின்றனர்.பாதிக்கப்பட்ட செல்வராஜ் கூறியதாவது:டில்லி சுங்கத்துறையில் இருந்து சோதனை ஆய்வாளர் கார்த்திக் பேசுவதாக என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். சிங்கப்பூருக்கு அனுப்பிய பார்சலில் 19 போலி பாஸ்போர்ட், 65 ஏ.டி.எம்., கார்டு, தடை செய்யப்பட்ட 159 கிராம் போதை பொருள் இருப்பதாக கூறினார். 'நான் பார்சல் எதுவும் அனுப்பவில்லை' என்றேன். 'வீடியோகாலில் பேசும் உயரதிகாரியிடம் நடந்ததை கூறுங்கள். என் பெயரை பயன்படுத்தி பார்சல் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கூறுங்கள்' என்றுக்கூறி இணைப்பை துண்டித்தார். சிறிது நேரத்தில் வீடியோ காலில் பேசிய நபர், என்னிடம் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை கேட்டார். பிறகு 'இக்குற்றத்திற்கு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும். அதனால் இவ்வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் அனுப்புங்கள்' என்றார். நான் மறுக்கவே என் வாட்ஸ் ஆப்பிற்கு டில்லி நீதிமன்றத்தில் இருந்து கைது வாரன்ட், சொத்து பறிமுதல் உத்தரவு என அரசு முத்திரையுடன் சிறப்பு இயக்குநர் கையெழுத்திட்ட போலி உத்தரவை அனுப்பி மிரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.எஸ்.ஐ., முத்துக்குமார் கூறுகையில் அலைபேசியில் பணம் கேட்பவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுகுறித்து சைபர் கிரைம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
20 hour(s) ago
20 hour(s) ago