உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மைய நுாலகம் சீரமைப்பு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மைய நுாலகம் சீரமைப்பு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : மதுரை மைய நுாலகத்தில் ரூ.97 லட்சத்தில் சீரமைப்பு பணி துவங்கியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.மதுரை மேலப்பொன்னகரம் முத்துசெல்வம் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை சிம்மக்கல்லில் மைய நுாலகம் 1952ல் துவக்கப்பட்டது. 42 ஆயிரத்து 600 புத்தகங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக பயன்படுத்துகின்றனர்.போதிய குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. மின் விளக்குகள், மின் விசிறிகள் பழுதடைகின்றன. கூரை பழுதடைந்துள்ளதால் கட்டடத்திற்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. பொது நுாலகத்துறை இயக்குனர், மாவட்ட நுாலக அலுவலருக்கு புகார் அனுப்பினேன். போதிய குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு, மின்விசிறி வசதி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: ரூ.97 லட்சம் ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணி துவங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: பொது நுாலக இயக்குனர், மாவட்ட நுாலக அலுவலர் ஆக.27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி