உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி

விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே திருவாலவாய நல்லுரரில் வேளாண் துறை சார்பில் பண்ணை கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். உதவி இயக்குனர்கள் பாண்டி, சக்தி கணேசன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மாலிக் வரவேற்றார். சமயநல்லுரர் மீனாட்சி மில்ஸ் ஜி.எச்.சி.எல்., அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பண்ணை கருவிகள் வழங்க நிதி உதவியை சி.எஸ்.ஆர்., அலுவலர் சுஜின் வழங்கினார். வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன் விவசாயிகளுக்கு கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், இரும்பு தட்டு உள்ளிட்ட கருவிகயை வழங்கினார். 55 விவசாயிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 155 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. உதவி அலுவலர் தங்கையா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்