மேலும் செய்திகள்
பயிர் சுழற்சியால் நன்மை: விவசாயிகளுக்கு ஆலோசனை
16-Sep-2024
ஒரே நேரத்தில் 7 பயிர்கள் மண் வளம் மேம்பட 'ஐடியா'
02-Sep-2024
மதுரை : மதுரை மாவட்டத்தில் 8000 எக்டேர் பரப்பளவில் சாகுபடியாகும் பருத்தியில் ஊடுபயிர் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பருத்தியும் ஊடுபயிரும் பூச்சி நோய் கட்டுப்பாட்டில் ஒன்றுக்கொன்று உதவும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். ஊடுபயிர்கள் குறைந்த வயதுடையதாக, பருத்தியின் உயரத்தை விட குறைவாக இருக்கவேண்டும். வெண்டை பயிர் சாகுபடி செய்தால் பூச்சிகள் பாதித்த பின் வெண்டையை 60 --- 70 நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும். மக்காச்சோளம், சோளம், சூரியகாந்தி ஊடுபயிர்கள் பருத்தியின் வளர்ச்சியுடன் போட்டியிடும், கத்தரி, தக்காளி, வெண்டை, துவரை போன்றவை பருத்தியை தாக்கும் பூச்சிகளால் விரும்பப்படும் என்பதால் தவிர்க்க வேண்டும்.உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு, சின்ன வெங்காயம், கொத்தவரை, முள்ளங்கி, கொத்தமல்லி, பீட்ரூட், தண்டுக்கீரை ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம். ஊடுபயிர்கள் பருத்தியின் இடைப்பட்ட பகுதிகளை அடைத்து மண்ணை மூடிவிடுவதால் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சணப்பு, தக்கைப்பூண்டு பசுந்தாள் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால் மண்வளம் பெருகும். கூடுதலாக உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ தேவையில்லை என்றார்.
16-Sep-2024
02-Sep-2024