உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்வதேச சிலம்ப போட்டி

சர்வதேச சிலம்ப போட்டி

மதுரை : மலேசியாவின் சிலாங்கூர் நகரில் சர்வதேச சிலம்ப போட்டி நடந்தது. இந்தியா , மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கத்தார், துபாயைச் சேர்ந்த 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய அணி சார்பில் தமிழ்நாடு அணியில் போர்க்கலை சிலம்பக் கூட மாணவர்கள் தலைமை பயிற்சியாளர் தாமரைச்செல்வன் தலைமையில் பங்கேற்றனர். 7 முதல் 9 வயது பிரிவில் ஷாகுல் ஹமீது தங்கம், வெள்ளி, ஈஷன் தங்கம், வெண்கல பதக்கங்களையும் வென்றனர். 10 முதல் 12 வயது பிரிவில் அபிஷேக் பாலா வெள்ளி, ரதியா தங்கம், வெள்ளி, விஷால் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். பரணிதரன் தங்கம் மற்றும் வெண்கலம், ப்ரனேஷ் வெள்ளி, வெண்கலம், பவன், ரகுநாத், முத்துராஜா, அஸ்வின் சூர்யா வெண்கல பதக்கம் வென்றனர். 13 முதல் 15 வயது பிரிவில் அபர்ணா 2 வெண்கலம், மதி 2 வெள்ளிப்பதக்கம், இனியா வெண்கலம், ரித்துன் தங்கம், சாய் அபிஷேக் 2 வெண்கலம், முகில்வேலன் 2 வெண்கலம், தீக்க்ஷித் வெண்கலப்பதக்கம் வென்றனர். 19 முதல் 21 வயது பிரிவில் செண்பகவள்ளி 2 தங்கப்பதக்கம், பாலசந்துரு வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி