உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு பணியில் முறைகேடா கலெக்டரிடம் புகார்

ரோடு பணியில் முறைகேடா கலெக்டரிடம் புகார்

மதுரை: கலெக்டரிடம் முன்னாள் மாவட்ட பஞ்., கவுன்சிலர் விஜயபிரபாகர் அளித்த மனு: செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்துார் சங்கம்பட்டியில் நல்ல நிலையில் இருந்த சிமென்ட் ரோடு மீது நடுவில் சிமென்ட் பைப்கள் மூலம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மீது பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.இப்பணி தரமானதாக நடக்கவில்லை. இந்த மயான சாலையில் விவசாய பாசன வாய்க்கால்கள், சாலை குறுக்கே செல்லும் சிறிய வாய்க்கால்கள் அடைபட்டுள்ளன. மழைக்காலங்களில் மயான சாலை தண்ணீரில் அடித்துச் செல்ல வாய்ப்புள்ளது. இதற்கான அரசு பணத்தில் மோசடி நடக்க, ஒப்பந்ததாரரோடு அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனர். பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி