மேலும் செய்திகள்
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
14 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., மண்டல ஆய்வுக்கூட்டம்
14 hour(s) ago
மதுரை : மதுரை ஆவினில் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதை முன்னிட்டு பாண்டி கோயிலில் கிடா வெட்டி ஊழியர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.சில மாதங்களுக்கு முன் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 1.47 லட்சம் லிட்டராக குறைந்தது. பால் கொள்முதல் அதிகரித்தால் பாண்டி கோயிலுக்கு கிடா வெட்டி அன்னதானம் வழங்குவதாக ஊழியர்கள் வேண்டிக்கொண்டனர். இதையடுத்து தற்போது நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள், அலுவலர்கள் சார்பில் கிடா வெட்டி அன்னதானம் வழங்கினர்.ஊழியர்கள் சிலர் கூறுகையில், ஆவின் அலுவலக அனைத்து பிரிவு அலுவலர்களிடமும் வசூல் நடத்தி இதுபோன்ற கிடா விருந்து நடந்துள்ளது. தற்போது பெண் அதிகாரிகள் சார்பில் இவ்விருந்து வைக்கப்பட்டது என்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago